Skip to main content

2013 Rasi Palan: குரு பெயர்ச்சி பலன்கள் (கும்ப ராசி)


இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை மே மாதம் 31 தேதி (வைகாசி 17) அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். 


கும்ப ராசிக்கு குரு 11வது மற்றும் 2வது வீட்டிற்கு உரியவர். இரு வீடுகளுமே நல்ல வீடும் இல்லை, அதே போல கெட்ட வீடும் அல்ல மேலும் மகர ராசியின் அதிபதியான சனியும் குருவும் நண்பர்களும் இல்லை, அதே போல விரோதிகளும் இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக கருதுபவர்கள். ஆகவே குரு கும்ப ராசிக்கு சுபரும் இல்லை அதே போல பாபரும் இல்லை. 

ஆகையால் குரு நல்ல இடத்தில் இருந்தால் நல்லதை செய்வார். அதே நேரத்தில் கெடுதலான இடத்தில இருந்தால் கண்டிப்பாக கெடுதலான பலனை செய்யாமல் விட மாட்டார். 


இப்பொழுது குரு பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். மிதுன ராசி  புதனுடைய வீடு ஆகும். புதன் குருவை சமமாக கருதுபவர். குரு புதனை எதிரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பலமற்று மிதுன ராசியில் உள்ளார். ஆனால் மிதுன ராசி என்பது கும்ப ராசிக்கு மிகவும் நன்மையை தரக்கூடிய 5வது வீடு ஆகும். 


ஆனால் 11வது வீட்டிற்கு 7வது இடம் என்பது 5ம் இடம் ஆகும். 11வது வீட்டினை லாப ஸ்தானம் என்று அழைக்க படுவது உண்டு. குருவின் இந்த பலமற்ற நிலையால் 11வது மற்றும் 2ம் வீட்டிற்கு உரிய நல்ல பலனை முழுமையாக செய்ய முடியாமல் போய்விடும். 


மொத்தத்தில் 2013 குரு பெயர்ச்சி கும்ப ராசிக்கு கண்டிப்பாக கெடுதலான பலனை தராது. அதே நேரம் யோக பலன்கள் சற்று குறைவாக காணப்படும். இப்பொழுது நாம் 2013 வருடத்திற்க்கான குரு பெயர்ச்சியின் பலன்களை நாம் பார்ப்போம்.


31.05.2013 முதல் 08.06.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:


கும்ப ராசியினர் மூத்த சகோதர உறவுகளில் இருந்து வரும் சில மன வருத்தங்களை சரி செய்வதில் வெற்றியும் காண்பார்கள். தொழிலில் நீடித்த குறைந்த லாப விகிதாரத்தினை கூட்டுவதில் வெற்றியும் காண்பார்கள். இது பொருளாதார நிலையை சற்று வளப்படுத்தும். குடும்ப உறவுகளை சீர் படுத்துவார்கள். முயற்சி செய்தாவது கொடுத்த வாக்கினை காப்பற்றுவார்கள். 



08.06.2013 முதல் 02.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:

குரு 08.06.2013 அன்று அஸ்தமனமாகிறார். இந்த காலத்தில் குருவால் கிடைக்கும் நல்ல பலன்கள் அனைத்தும் தடைப்படும். மேலும் கும்ப ராசி மற்றும் கும்ப இலக்கின மக்கள் அனைவரும் நல்ல நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 02.07.2013 அன்று குரு மீண்டும் உதயமாகிறார்.

லாபங்கள் எதிர்பார்த்த அளவு இருக்காது. இதனால் பொருளாதார நிலையில் சற்று பின்னடைவு ஏற்படும்  குடும்பத்தில் சற்று குழப்பமான நிலைமை உண்டாகும். கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமல் போகலாம். மூத்த சகோதர உறவுகளில் சற்று இடைவெளி உண்டாகும்.


02.07.2013 முதல் 13.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:


கும்ப ராசியினர் எதிர் பார்க்கும் லாபங்கள் கிடைக்க ஆரம்பிக்கும். கொடுத்த வாக்கினை கும்ப ராசியினர் முயற்சி செய்து நிறைவேற்றுவார்கள். பொருளாதார நிலையில் இது வரை இருந்து வந்த மந்த நிலைமை மாரி கும்ப ராசியினருக்கு திருப்தி அளிக்கும். குடும்ப உறவுகள் சீரான நிலையில் இருக்கும். மூத்த சகோதர உறவுகள் சற்று திருப்தியான நிலையில் செல்லும். 


13.07.2013 முதல் 30.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:


லாபங்கள் பெரிய அளவு சரிவை சந்திக்கும். ஆதனால் பண பரிவர்த்தனைகள் சற்று சிக்கலான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் கும்ப ராசியினர் யாருக்கும் வாக்கினை கொடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்திலும் உறவுகள் மத்தியில் இடைவெளி உண்டாகும். மூத்த சகோதர உறவுகள் சற்று பின்னடைவை சந்திக்கும். 


30.07.2013 முதல் 15.08.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:

கும்ப ராசியினர் மீண்டும் சாதகமான சூழ்நிலையை அனுபவிப்பார்கள். பொருளாதாரம் மற்றும் குடும்ப விசயங்களில் இது வரை இருந்து வந்த நிலை மாறி சற்று சாதகமான போக்கு தென்படும். ஆனால் கும்ப ராசியினர் எதிர்பார்க்கும் சூழ்நிலையும் மொத்தமாக மாறுவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு. 

15.08.2013 முதல் 23.09.2013 முடிய  குரு பெயர்ச்சியின் பலன்கள்:

லாபங்கள் எதிர்பார்த்த அளவு வர ஆரம்பிக்கும். ஆக கும்ப ராசியினரின் பொருளாதார நிலை சற்று சீர் அடையும். கும்ப ராசியினர் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவார்கள். மூத்த சகோதர உறவுகள், குடும்ப சூழ்நிலை முற்றிலும் சாதகமாக மாறும். 


23.09.2013 முதல் 08.11.2013 முடிய  குரு பெயர்ச்சியின் பலன்கள்:

மீண்டும் லாபங்கள் எதிர் பார்த்த அளவு இருக்காது. இது கும்ப ராசியினரின் பண விசயங்களில் சற்று பின்னடைவை ஏற்படுத்தும். மேலும் குடும்ப விஷயங்களில் சற்று குழப்பமான நிலை ஏற்படும். மூத்த சகோதர உறவுகளில் சற்று இடைவெளி உண்டாகும். கொடுத்த வாக்கினை சற்று போராடி நிறைவேற்ற வேண்டும்.

8.11.2013 முதல் 21.02.2014 முடிய  குரு  பெயர்ச்சியின் பலன்கள்:

குரு இந்த காலத்தில் வக்கிர நிலையை அடைகின்றார். எந்த ஓரு கிரகமும் வக்கிர நிலையை அடையும் பொழுது தன்னுடைய உண்மையான போக்கினை மாற்றி நாம் எதிர்பாராத பலனை செய்யும். நாம் இந்த வக்கிர குரு பலனை பின்பு ஆராய்வோம்.


கும்ப ராசியினரின் கவனத்திற்கு:

1. குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி பலன் நமது வாழக்கையில் சிறிய அளவே மாற்றங்களை கொடுக்கும் சக்தி உள்ளது. 

2. அவரவர் தசா மற்றும் புத்தி பலன்களை பொறுத்தே வாழ்கையில் நிகழ்வுகள் நடைபெறும்.

3. இந்த குரு பெயர்ச்சி பலன்கள் உங்களின் தசா மற்றும் புத்தி அடிப்படையில் சற்று மாறுபட்டு நடைபெறும்.

4. குரு பிறந்த ஜாதகத்தில் நல்ல விட்டில் இருந்தால், குரு பெயர்ச்சி நன்றாக அமையவில்லை என்றாலும் வாழ்க்கை நன்றாகவே அமையும்.

5. நல்ல திசை நடந்து கொண்டு இருக்கும் பொழுது, கெடுதலான குரு பெயர்ச்சியால் பெரிய துன்பங்கள் நடக்காது.

6. கும்ப ராசியினருக்கு 2வது, 11வது கிரகம் அல்லது குருவின் திசை நடந்து அந்த கிரகம் துர் ஸ்தானங்களில் இருந்தால் சற்று பண விசயங்களில் சங்கடங்கள் ஏற்படலாம். 


7. கும்ப ராசியினருக்கு 2வது வீட்டில் பாப கிரகங்கள் இருந்தாலும் அல்லது 2வது வீட்டு அதிபதி நீச்சம் அடைந்தாலோ அல்லது கெட்டு போய் இருந்தாலோ கொடுத்த வாக்கினை நிறைவேற்றுவதில் சற்று சிரமம் ஏற்படும்.


8. கும்ப ராசியினருக்கு 2வது, 7வது, 9வது வீட்டு கிரகமோ அல்லது குரு அல்லது சுக்கிர திசை நடந்து அந்த கிரகம் கெட்டு போய் இருந்தால் குடுமபத்தில் சற்று குழப்பம் ஏற்படலாம்.


9. கும்ப ராசியினருக்கு 3வது, 11வது வீட்டு கிரகம் அல்லது செவ்வாய் திசை நடந்து, அந்த கிரகம் துர் ஸ்தானமோ அல்லது கெட்டு போய் இருந்தாலோ சகோதர அல்லது நண்பர்கள் உறவில் சற்று பாதிப்பு ஏற்படும்.


10. இந்த குரு பெயர்ச்சி கும்ப ராசியினருக்கு பெரிய அளவு பாதிப்புகளை ஏற்படுத்தாது. முடிந்த அளவு குரு நல்ல பலனையே வழங்குவார். 


11 குருவின் பலமற்ற பார்வை 9வது, 11வது மற்றும் 1வது வீட்டில் விழுகின்றது.  இதனால் கும்ப ராசியினருக்கு இந்த வருட குரு பெயர்ச்சி சாதகமான பலன்களையே தரும். 


12. குருவின் பரிகாரம் செய்யும் பொழுது இந்த குரு பெயர்ச்சியால் வரும் துன்பங்கள் குறைந்து இன்ப சூழ்நிலை நிலவும். 

குரு பரிகார முறைக்கு எங்களது www.jothidapariharam.blogspot.in என்ற வலைதளத்திற்கு வாருங்கள். படித்து பயன் பெறுங்கள். மேலும் உங்கள் ஜாதகத்தை சரியாக கணிப்பதற்கு Author Meganathan. G ஐ தொடர்பு கொள்ளுங்கள். வெளி நாட்டில் வசிப்பவர்கள் Pay Pal மூலம் பணம் செலுத்தி ஜாதகம் பற்றிய முழு விபரங்களை பெற்று கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

MARRIAGE TROUBLES FOR KUMBHA LAGNA

Planetary position that indicates Marriage troubles for the Kumbha Lagna (Aquarius Rising) natives: 1. The Sun and/or Guru getting placed in the Aries, Cancer, Virgo, Libra and Capricorn. 2. The presence of  Mars, Budhan and/or Venus in the Pisces and/or in the Leo. 3. The association of Sun with the Budhan and/or Moon in any zodiac signs. But the placement in Aries, Cancer, Leo, Virgo, Libra and Capricorn would be devastating. 4. The Parivartana Yoga (interchange of houses) between Sun or Guru with the Budhan or the Mars. The Parivartana Yoga between the Sun and Venus or Moon also brings troubles. 5. The Sun getting placed in the Libra in the Navamsa chart. Also the Sun getting placed in the 3rd, 6th, 8th and 12th house from the Navamsa Lagna. 6. The Guru getting placed in the Capricorn in the Navamsa chart. Also the Guru getting placed in the 3rd, 6th, 8th and 12th house from the Navamsa Lagna. 7. The Sun and/or Guru traversing in the 22nd Nakshatra...

SHANI SADE SATI KUMBH RASHI 2021

  2020 – 2023 Shani Sade Sati for Kumbh Rashi 2020 - 2023 Kumbha Rasi Shani Transit The Shani becomes the Rasi lord (Aquarius/Kumbha Rasi) and 12 th  house lord (Capricorn/Makara Rasi) for the Kumbha Rasi (Aquarius sign) natives. The Shani is transiting into Makara Rasi (Capricorn Sign) for the next 3 years staring from January 2020. The Makara Rasi (Capricorn Sign) happens to be the 12 th  house for the Kumbha Rasi (Aquarius sign) natives. The placement of Shani in the 12 th  house would indicate the start of Shani Sade Sati (7½ years period) for the Kumbha Rasi (Aquarius sign) natives. The Kumbha Rasi (Jenma Rasi) is considered to be the beneficial house for the Kumbha Rasi (Aquarius sign) natives; and 12 th  house (Capricorn/Makara Rasi) is considered to be malefic for the Kumbha Rasi (Aquarius sign) natives. Thus, the Shani owns both the benefice house (Jenma Rasi/Aquarius/Kumbha Rasi); and the malefic house (12 th  house/Capricorn/Makara Rasi). Thus, t...

AQUARIUS ASTROLOGY PREDICTIONS 2024 JUNE

2024 June Aquarius Financial Astrology 2024 June Aquarius Horoscope Predictions Job searches, Job promotions & Project implementations: Mixed progress (or) delays is possible during the entire month of June 2024. Work Attendance, Work efficiency & Productivity: Unsteady performances (or) delays in productivity are possible from 1 st to 12 th June 2024. Good productivity & stable performances are likely from 13 th to 30 th June 2024. Sales & Marketing: Fluctuating sales (or) delays in concluding the sales deals are possible during the entire month of June 2024. Speculations: Mixed success (or) unpredictable results is possible during the entire month of June 2024. Payment Collections & Profits on Investments: Partial payment collections & uncertain profits are possible during the entire month of June 2024. Hurdles are possible from 2 nd to 6 th June 2024.   Borrowings & Debt Holdings: Debt levels would remain unchanged (or) increas...