இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை மே மாதம் 31 தேதி (வைகாசி 17) அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். கும்ப ராசிக்கு குரு 11வது மற்றும் 2வது வீட்டிற்கு உரியவர். இரு வீடுகளுமே நல்ல வீடும் இல்லை, அதே போல கெட்ட வீடும் அல்ல மேலும் மகர ராசியின் அதிபதியான சனியும் குருவும் நண்பர்களும் இல்லை, அதே போல விரோதிகளும் இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக கருதுபவர்கள். ஆகவே குரு கும்ப ராசிக்கு சுபரும் இல்லை அதே போல பாபரும் இல்லை. ஆகையால் குரு நல்ல இடத்தில் இருந்தால் நல்லதை செய்வார். அதே நேரத்தில் கெடுதலான இடத்தில இருந்தால் கண்டிப்பாக கெடுதலான பலனை செய்யாமல் விட மாட்டார். இப்பொழுது குரு பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். மிதுன ராசி புதனுடைய வீடு ஆகும். புதன் குருவை சமமாக கருதுபவர். குரு புதனை எதி ரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பலமற்று மிதுன ராசியில் உள்ளார். ஆனால் மிதுன ரா...